செய்திகள் மலேசியா
மின் கட்டணங்கள் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 3 நபர்கள் மீது எம்சிஎம்சி விசாரணை
சைபர்ஜெயா:
பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் மின் கட்டண உயர்வு குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள் மீது மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
செய்தி நிறுவனத்தின் கூறுகளைப் பயன்படுத்தி, முகநூல், த்ரெட்ஸ், வாட்ஸ்அப் வழியாக இந்த உள்ளடக்கம் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டது.
அதன்படி, இந்தத் தகவல் பொய்யானது என்றும், இது பொதுமக்களிடையே எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டி, கவலையையும் பீதியையும் ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
விசாரணஒ முடிவுகளில், இந்த உள்ளடக்கம் ஆஸ்ட்ரோ அவானியின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து திருத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த விசாரணை, 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் நடத்தப்படுகிறது.
இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தவறான தகவல்களைப் பரப்புவதற்காக டிஜிட்டல் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவது தீவிரமாகக் கருதுகிறது என்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையின் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 12:22 pm
வெப்ப அலையை எதிர்கொள்ளும் மலேசிய அரசு: 4 மாநிலங்களில் செயற்கை மழை பொழியவைக்கும் அதிரடித் திட்டம்
April 1, 2026, 12:14 pm
மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நிலத்தடித் தீ: கிராம மக்கள் கடும் பீதி
April 1, 2026, 11:55 am
மேற்காசிய மோதல்: மலேசியாவின் நிலையை வலுப்படுத்த 3 துறைகளை உலக வங்கி கோடிட்டுக் காட்டுகிறது
April 1, 2026, 11:52 am
மர்மமான முறையில் மாயமான 39 வயதுப் பெண்: தீவிர தேடுதலில் பினாங்கு போலிஸ்
April 1, 2026, 11:10 am
கிள்ளானில் நடந்த கோரமான விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு
April 1, 2026, 10:48 am
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கிறது
April 1, 2026, 10:42 am
