செய்திகள் மலேசியா
அரச குடும்பத்தினரின் அடையாளங்களைப் பயன்படுத்திய 10,000க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் முடக்கப்பட்டன: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மாமன்னர், அரசியார் உள்ளிட்ட அரச குடும்பத்தினரின் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்திய 10,000க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.
ஜனவரி 1 முதல் மார்ச் 28 வரையிலான காலகட்டத்தில் எம்சிஎம்சி தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட புகார்களின் விளைவாக சமூக ஊடகத் தளங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று, மிகவும் கவலையளிக்கும் பல விஷயங்களை நான் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் எடுத்துரைத்தேன்.
எம்சிஎம்சியின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மாமன்னர் தம்பதியதியர் அல்லது அரச குடும்ப உறவினர்களின் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்திய 10,000க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தப் போக்கு குறைவதில்லை. ஜொகூரின் அரசப் பிரதிநிதியான சுல்தான் துங்கு மகோடா இஸ்மாயிலின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பகாங் சுல்தானின் பெயர்களைப் பயன்படுத்தும் போலி கணக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று எம்சிஎம்சி கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தெரிவிக்கிறது.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு ஒன்றியத்தின் இலக்கவியல் ஒளிபரப்பு கருத்தரங்கைத் தொடங்கி வைத்த பிறகு அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 12:22 pm
வெப்ப அலையை எதிர்கொள்ளும் மலேசிய அரசு: 4 மாநிலங்களில் செயற்கை மழை பொழியவைக்கும் அதிரடித் திட்டம்
April 1, 2026, 12:14 pm
மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நிலத்தடித் தீ: கிராம மக்கள் கடும் பீதி
April 1, 2026, 11:55 am
மேற்காசிய மோதல்: மலேசியாவின் நிலையை வலுப்படுத்த 3 துறைகளை உலக வங்கி கோடிட்டுக் காட்டுகிறது
April 1, 2026, 11:52 am
மர்மமான முறையில் மாயமான 39 வயதுப் பெண்: தீவிர தேடுதலில் பினாங்கு போலிஸ்
April 1, 2026, 11:10 am
கிள்ளானில் நடந்த கோரமான விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு
April 1, 2026, 10:48 am
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கிறது
April 1, 2026, 10:42 am
பெராவில் ஆடவரை பாராங்கத்தியால் வெட்டிய நான்கு இந்தியர்களை போலிஸ் தேடி வருகிறது
April 1, 2026, 10:41 am
