நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கிறது

கோலாலம்பூர்: 

கேஎப்சி, பிட்சா ஹட் உணவகங்களை நடத்தும் க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் ஹோல்டிங்ஸ், நாடு முழுவதும் உள்ள வசதி குறைந்த மாணவர்களை ஆதரிக்க RM1 மில்லியன் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரியும் மேலாண்மை இயக்குநருமான நெக்கல் கன்னா, கோங்சி பெர்சாமா இயக்கத்தின் மூலம் க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் கல்வி, மக்கள் நலனில் கவனம் செலுத்தி தனது உறுதிப்பாட்டை விரிவாக்குவதாக கூறினார்.

குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வலிமையான அடித்தளத்தையும் அர்த்தமுள்ள வாய்ப்புகளையும் வழங்குவதை இந்த முன்முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது.

"இந்த முன்முயற்சி mமாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஆதரவும் பெற்றதாகும்.

"சவாலான சூழ்நிலைகளிலும் கூட சமூகத்திற்கு பதிலளிப்பதையும் நாட்டின் வளர்ச்சியை ஆதரிப்பதையும் க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் எப்போதும் முன்னுரிமைப்படுத்துகிறது.

"ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பு பெற தகுதி உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முன்முயற்சி மூலம், மேலும் அதிகமான இளைஞர்களுக்குச் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்" என்று இன்றைய அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

கடந்த திங்களன்று, மாமன்னர் தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் கோங்சி பெர்சாமா விழாவை தொடக்கி வைத்தார்.

நெக்கல், நிறுவனத்தின் உயரிய நிர்வாக குழு மாமன்னரை வரவேற்றனர்.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சிலும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

நிகழ்வில், இந்த முன்முயற்சியின் முதல் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸின் RM1 மில்லியன் நன்கொடையை வழங்கியது.

அவற்றில் ஜொகூர் பாருவில் உள்ள தாசிக் உத்தாரா தேசிய ஆராம்பப்பள்ளி, ஜொகூர் ரின்திஸ் பாங்சா ஆரம்பப்பள்ளி, சிலாங்கூரில் உள்ள பைதுல் சாகினா பராமரிப்பு மையம் ஆகியவை அடங்கும்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset