நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தானில் ஒரு சிரிப்பான பெருநாள் அனுபவம்: மாமாவுக்கு உதவப் போய் மரத்தில் சிக்கிய 11 வயது சிறுவன்

ஷா ஆலம்:

கிளாந்தான், மாச்சாங் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குப் பெருநாள் விடுமுறைக்காகச் சென்ற 11 வயது சிறுவன் ஒருவன், பெத்தாய் மரத்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

துறுதுறுப்பான சுபாவம் கொண்ட சையத் அஃபிக் ராய்யான் என்ற அந்தச் சிறுவன், தனது மாமாவுக்குப் பெத்தாயைப் பறிக்க உதவ முயன்றபோது மரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டான்.

உறவினர்களுடன் வீட்டில் உணவு உண்டு கொண்டிருந்த அச்சிறுவனின் தாய் நோராஃபிடா அஸ்மி, வெளியே இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடி வந்து பார்த்துள்ளார். 

மரத்தின் உச்சியில் ஏறிய சிறுவன், கீழே இறங்கப் பயந்து அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு குடும்பத்தினர் முதலில் பதற்றமடைந்தனர். அச்சமும் ஆத்திரமும் கலந்த நிலையில் அவனது தாய் திகைத்து நின்றாலும், சிறுவனின் விசித்திரமான முகபாவனைகள் அங்கிருந்தோரிடையே மெல்லிய சிரிப்பையும் ஏற்படுத்தியது.

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, சிறுவனின் தந்தையின் உதவியுடன் அவன் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டான்.

இந்தச் சம்பவம் முதலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், இறுதியில் ஒரு இனிமையான நினைவாக மாறியது. தற்போது அந்தச் சிறுவன் எவ்வித அச்சமுமின்றி, தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த வேடிக்கையான சம்பவத்தைச் சிரித்துப் பேசி மகிழ்வதாக அவனது தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset