நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதையில் மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா LRT சேவைகளில் தாமதம்

பெட்டாலிங் ஜெயா: 

இங்கு தாமான் பரமவுண்ட் ரயில் பாதையில் ஒரு மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா LRT இணையத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

ரேபிட் கே.எல்., இதனால் மாற்று ரயில் ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ரேபிட் கே.எல். தெரிவித்தது.

புத்ரா ஹைட்ஸிலிருந்து வரும் ரயில்கள் கெலானா ஜெயா நிலையத்தில் நிறுத்தப்பட்டு புத்ரா ஹைட்ஸை நோக்கி திரும்பும் என்று அது தெரிவித்தது.

2-ம் தளத்தில் கெலானா ஜெயா நிலையத்திற்கும் தாமான் ஜெயாவிற்கும் இடையே ஷட்டில் ரயில் சேவைகள் இயங்குகின்றன, கோம்பாக்கிலிருந்து வரும் ரயில்கள் தாமான் ஜெயாவில் நிறுத்தப்பட்டு கோம்பாக்கை நோக்கி திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டது.

"பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் அதிகமாக இருக்கும்" என்று இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset