நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேக நபர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்

கிள்ளான்:

குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேக நபர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

ஜாலான் ராயா பாரத் சாலையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி நிகழ்ந்த ஒரு கொடிய விபத்தில் சந்தேக நபர், அந்தச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இன்று இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.

20 வயதுகளில் உள்ள அந்த நபர், போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை உறுப்பினர்களால் பலத்த பாதுகாப்புடன் தெற்கு கிளாங் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். நீதிபதி ஏ. கார்த்தியாயினி முன்னிலையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாள் நீதிமன்றக் காவல் காலம் முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

மது, போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு வந்த அந்த நபர், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1)-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 100,000 ரிங்கிட் வரை அபராதம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset