செய்திகள் மலேசியா
வாகன ஓட்டியைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபருக்கு போலிஸ் வலைவீச்சு
மலாக்கா:
ஜாசின், செளந்தர் பகுதியில் உள்ள கம்போங் புக்கிட் செங்கே அருகே, கார் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிவிட்டு, அவரது வாகனத்தையும் சேதப்படுத்திய மர்ம நபரைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி மாலை 3.34 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், இது குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் ஜாசின் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் லீ ராபர்ட் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று 35 வயது மதிக்கத்தக்க புகார்தாரரின் கார் பின்னால், நீல நிற 'யமஹா லகெண்டா' மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தடுமாற்றத்துடன் வாகனம் ஓட்டியுள்ளார். இதனை அவதானித்த புகார்தாரர், அந்த நபர் தனது காரை முந்திச் செல்லும்போது ஜன்னலைத் திறந்து அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது மோட்டார் சைக்கிளைத் திருப்பி வந்து புகார்தாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துமீறிய அந்த நபர், புகார்தாரரின் கார் கதவை உதைத்ததோடு, தனது தலைக்கவசத்தால் கார் கண்ணாடியையும், கதவையும் பலமுறை தாக்கியுள்ளார்.
கார் ஓட்டுநர் வெளியே வந்தபோது, அவர் மீதும் தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் புகார்தாரரின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, காரும் பலத்த சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாகத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி சார்ஜென்ட் ஐனுல் ஷாஹிரா (012-467 1531) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 11:10 am
கிள்ளானில் நடந்த கோரமான விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு
April 1, 2026, 10:48 am
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ க்யூஎஸ்ஆர் பிராண்ட்ஸ் ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கிறது
April 1, 2026, 10:42 am
பெராவில் ஆடவரை பாராங்கத்தியால் வெட்டிய நான்கு இந்தியர்களை போலிஸ் தேடி வருகிறது
April 1, 2026, 10:41 am
மின் கட்டணங்கள் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 3 நபர்கள் மீது எம்சிஎம்சி விசாரணை
April 1, 2026, 10:39 am
உலகளவில் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் மலேசியாவின் பொருளாதாரம் மீள்திறனுடன் உள்ளது: பிரதமர்
April 1, 2026, 10:25 am
இணையப் பயனர்களின் ரகசியத் தகவல்களைக் குறிவைக்கும் 'ஆக்சியோஸ்' வைரஸ்
April 1, 2026, 10:17 am
பாதையில் மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா LRT சேவைகளில் தாமதம்
April 1, 2026, 10:06 am
