செய்திகள் இந்தியா
கேரளாவில் அதிர்ச்சி: சிம் கார்டுகளைத் திருடி நூதனமாக வங்கிகளில் களவாடிய ஆடவர் கைது
கொச்சி:
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களின் இருக்கைக்குக் கீழே வைக்கப்படும் செல்போன்கள், வங்கி ஆவணங்களைக் கொண்டு, நூதன முறையில் பணத்தைத் திருடி வந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரைத் திருச்சூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போலிச் சாவிகளைப் பயன்படுத்தி வாகனங்களைத் திறந்து, அதில் உள்ள செல்போன்களின் 'சிம் கார்டுகளை' தற்காலிகமாகத் திருடி, வங்கியின் ரகசியக் குறியீடுகளைப் (OTP) பெற்று லட்சக்கணக்கான ரூபாயைத் தனது கணக்கிற்கு மாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளி முதலில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைக் கண்காணிப்பார். பின்னர் போலிச் சாவிகள் மூலம் இருக்கையைத் திறந்து, அங்குள்ள செல்போன்களிலிருந்து சிம் கார்டுகளை எடுத்துத் தனது போனில் பொருத்துவார்.
அந்த எண்ணைக் கொண்டு வங்கியின் இணையப் பணப்பரிவர்த்தனைத் தளங்களில் உள்நுழைந்து, கடவுச்சொற்களை மாற்றிப் பணத்தைத் திருடுவார். வேலையை முடித்த பின், சிம் கார்டை மீண்டும் பழைய போனில் வைத்துவிட்டுத் தப்பியோடி விடுவார். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் பணம் திருடுபோனது உடனடியாகத் தெரிவதில்லை.
கேரளாவில் மட்டும் பல மாவட்டங்களில் இது போன்ற 50-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. பல மாதங்களாகத் தேடப்பட்டு வந்த இந்த நபர், சமீபத்தில் ஒரு சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் பிடிபட்டார். இவரிடமிருந்து ஏராளமான போலிச் சாவிகள், மோசடிக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவருக்குப் பின்னால் பெரிய கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர், இருசக்கர வாகனங்களின் இருக்கைக்குக் கீழ் செல்போன்கள், வங்கிப் புத்தகங்கள், ஆதார் அட்டைகள் போன்ற முக்கியமான ஆவணங்களை ஒருபோதும் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருடர்கள் இவ்வளவு நுணுக்கமாகச் செயல்படுவது வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
