நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்களின் பாவடைக்கு அடியில் செல்போனால் படம் பிடித்த நபருக்கு போலிஸ் வலைவீச்சு: பிரபல வர்த்தக வளாகத்தில் அநாகரிகச் செயல்

சுபாங் ஜெயா:

சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில், பெண் வாடிக்கையாளர்களின் பாவாடைக்கு அடியில் தனது கைபேசியைக் கொண்டு ரகசியமாகப் படம்பிடித்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.16 மணியளவில் இது தொடர்பாகக் காவல்துறைக்கு முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் பெண்களை ரகசியமாகப் படம் பிடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுபாங் ஜெயா மாவட்டக் காவல் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட், தப்பியோடிய அந்த நபரை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறியவும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாகத் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையிலோ அல்லது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ இக் காணொலிகளைப் பொதுமக்கள் பகிர வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உதவி காவல் கண்காணிப்பாளர் சித்தி சாரா ஜொஹாரி அவர்களை 013-209 7958 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு தகவல் வழங்கி விசாரணையைத் துரிதப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset