செய்திகள் மலேசியா
பொதுக் குழாயைச் சரிசெய்ததற்காக நண்பன் மீது கத்திக்குத்து தாக்குதல்: 31 ஆடவர் பலி
யான்:
கெடா மாநிலத்தின் யான் பகுதியில், மலை நீர் விநியோகக் குழாயைச் சரிசெய்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது நண்பனாலேயே கத்தியால் குத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிராம மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்ததற்காக, 41 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஆத்திரமடைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
நேற்று மாலை 7 மணியளவில் சிங்கிர் பாடோங் சாலையில் நிகழ்ந்த இந்தத் தகராறில், சந்தேக நபர் திடீரென கத்தியை எடுத்துத் தாக்க முயன்றபோது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட நபரின் மணிக்கட்டு பகுதியில் கத்திக்குத்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ஆத்திரம் அடங்காத அந்த நபர், சாலையில் விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் எரிபொருள் குழாயைத் துண்டித்து அதற்குத் தீ வைத்துள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள், காயமடைந்தவரை மீட்டு யான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று இரவு 8 மணியளவில் சிங்கிர் டாராட் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சந்தேக நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு போதைப்பொருள் குற்றப் பின்னணிகளைக் கொண்ட அவர் மீது, ஆயுதத்தால் காயப்படுத்துதல், தீ வைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் செப்பாங் நீதிமன்றத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
