நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்

கோலாலம்பூர்: 

மலேசியாவுக்கு சொந்தமான கப்பல்கள் எந்த சுங்க வரியும் செலுத்தாமல் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதன்மூலம் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான நகர்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

மலேசியாவுக்கான ஈரான் தூதர் வேல்யோல்லா மொஹமடி நஸ்ரபாடி, பாரசீக வளைகுடாவில் ஏழு மலேசிய கப்பல்கள் அந்த திட்டமிட்ட வழித்தடத்தில் செல்ல விரும்புவதாகவும் தெஹ்ரானுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

மலேசியா உட்பட நட்பு நாடுகளின் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுக்கவில்லை என்றும், சுங்க வரி ஏதும் இல்லாமல் அதை பயன்படுத்தலாம் என்று உத்தரவாதம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், சர்வதேச ஊடகங்கள் ஈரான் இராணுவம் நீரிணையில் சுங்கச்சாவடி மையங்களை நிறுவி AS$2 மில்லியன் (RM8.04 மில்லியன்) வரை வசூலிப்பதாக கூறியதைத் தொடர்ந்து, மலேசிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்வதற்கு தொகை செலுத்துகிறதா என்று தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுமா என்று கேட்டபோது, மலேசிய கப்பல்கள் சுதந்திரமாக கடந்துசெல்ல அனுமதிக்கப்படுகின்றன என்று வேல்யோல்லா தெரிவித்தார்.

இதற்கிடையில், ஏழு மலேசிய எண்ணெய் டேங்கர்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்காக காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் ஹசான்  தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை முழுவதும் மூடப்படவில்லை என்றும், மாறாக ஈரான் மீதான தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட அல்லது ஆதரிக்கும் நாடுகளை மட்டுமே இலக்கு வைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன என்றும், நட்பு நாடுகளுக்கு அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்துக்கொண்டு கடந்துசெல்ல அனுமதி வழங்கப்படுகின்றன என்றும் வேல்யோல்லா வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset