செய்திகள் மலேசியா
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
தன் சொந்த நாட்டவரையே கொலை செய்ததாக வீடற்ற வெளிநாட்டினர் ஒருவர் இங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றில் கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்திய குடிமகனான தங்கராஜு சுப்பையா (53), தமிழில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு தனக்கு புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் உள்ளதால் எந்த ஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.
மார்ச் 17-ல் கெப்போங்கில் உள்ள ஜாலான் லாங் கூனிங்கில் ப என்று பழனி என்று அறியப்படும் பாதிக்கப்பட்டவரைக் கொலை செய்ததாக தங்கராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
வழக்கறிஞர் இல்லாத தங்கராஜுவை வழக்கு முடியும் வரை போலிஸ் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் ஐனா அஸாஹ்ரா அரிஃபின் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக துணை அரசு வழக்குரைஞர் ஹென்ச் கோ நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை தேதியாக ஜூன் 10-ஐ நீதிமன்றம் நிர்ணயித்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
