செய்திகள் மலேசியா
1.64 மில்லியன் கிக் தொழிலாளர்களை காக்கும் சட்டம் 872 இன்று முதல் அமலுக்கு வருகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள 1.64 மில்லியன் தொழிலாளர்களை பாதுகாக்கும் கிக் தொழிலாளர் சட்டம் 2025 (சட்டம் 872) இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை அறிவித்தார்.
மலேசியாவில் கிக் பொருளாதாரத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், இத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு மேலும் விரிவான நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதையும் இச்சட்டம் அடிப்படையாக கொண்டுள்ளது.
இலக்கவியல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட எதிர்கால வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்குவதில் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தச் சட்டத்தின் அமலாக்கம் பிரதிபலிக்கிறது.
சேவை ஒப்பந்தங்களின் வெளிப்படைத்தன்மை, பணம் செலுத்துவதில் உறுதி, பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பு, மலேசிய தொழில்துறை உறவுகள் துறை, கிக் தொழிலாளர்கள் தீர்ப்பாயம் மூலம் மேலும் கட்டமைக்கப்பட்ட தகராறு தீர்வு வழிமுறைகளுக்கான அணுகல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான கட்டமைப்பை இந்த சட்டம் வழங்குகிறது.
இதன் மூலம், இச்சட்டம் 1.64 மில்லியனுக்கும் அதிகமான கிக் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்.
மேலும், கிக் வேலைவாய்ப்பு மாதிரியின் அடிப்படையான நெகிழ்வுத்தன்மையில் சமரசம் செய்யாமல், சொக்சோ மூலமான சமூக, தொழில் பாதுகாப்பு, சுகாதார அம்சங்களும் வலுப்படுத்தப்படுகின்றன.
சட்டம் 872இன் அமலாக்கம், ஒட்டுமொத்த கிக் துறைக்கும் குறிப்பிட்ட சட்டத்தை அறிமுகப்படுத்திய வாட்டாரத்தில் ஆரம்பகால நாடுகளில் ஒன்றாக மலேசியாவை ஒரு முதன்மை நிலையில் வைக்கிறது.
இதன் மூலம், வட்டார, உலகளாவிய மட்டங்களில் கிக் பொருளாதாரம் தொடர்பான கொள்கைகளின் வளர்ச்சியில் இது ஒரு முன்மாதிரியாக மாறும் வாய்ப்புள்ளது.
புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 12:10 pm
கெடாவில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு செயலாக்கம் கண்டுபிடிப்பு
March 31, 2026, 11:33 am
சாரா வழக்கு விசாரணை குழந்தை சாட்சியுடன் மீண்டும் தொடங்கியது
March 31, 2026, 11:03 am
'திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்': துணைப் பிரதமர்
March 31, 2026, 10:17 am
சுங்கை பெசியில் பரபரப்பு: மாயமான மாற்றுத்திறனாளி இளைஞர் நலமுடன் மீட்பு
March 31, 2026, 10:14 am
மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்
March 31, 2026, 10:01 am
கூலிமில் ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது: சார்லஸ்
March 31, 2026, 9:53 am
31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்
March 31, 2026, 9:36 am
