நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது

கோலாலம்பூர்: 

திங்களன்று கே.எல்.சி.சி. வளாகத்தை சுற்றி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் “புகைப்பட புழுக்கள்” என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட 25 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் சஜாலி அடாம், இரவு 10 மணியில் தொடங்கிய நடவடிக்கையில் 16 முதல் 48 வயதுக்கு இடையிலான 23 உள்ளூர் ஆண்கள், ஒரு உள்ளூர் பெண், ஒரு பிலிப்பைன்ஸ் ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

"குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148/324-ன் கீழ் விசாரணைக்கு உதவ இன்று முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

"1990 தேசிய பதிவு விதிமுறைகளின் விதி 25(1)(n)-ன் கீழும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது" என்று செவ்வாயன்று இங்கு டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளைப் புகைப்படம் எடுக்குமாறு தொல்லைப்படுத்தி குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் நபர்களான 'புகைப்பட புழுக்கள்' இந்த நடவடிக்கையை ஒழிக்க தாங்கள் இந்த சோதனையை மேற்கொண்டதாக சஜாலி கூறினார்.

"கைது செய்யப்பட்டவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றும் சுற்றுலாப் பயணிகளின் புகைப்படம் எடுப்பதையே வருமான ஆதாரமாக வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

"அவர்கள் குழுவாக நகர்வதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், தலைவர் யாரும் இல்லை, ஒவ்வொரு நபரும் வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சொந்த விவேகத்தைப் பயன்படுத்துகிறார்" என்று அவர் கூறினார்.

முந்தைய கைதுகளில் சில நபர்கள் ரேகையுடன் பொருந்தாத சந்தேகத்திற்குரிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"தேசிய பதிவு துறையுடனான (JPN) சரிபார்ப்பில் அடையாள அட்டை வைத்திருப்பவரின் ரேகையுடன் பொருந்தவில்லை என்று தெரியவந்தது, இது அவர்கள் மலேசிய குடிமக்கள் அல்லர் என்பதை காட்டுகிறது.

"சமீபத்திய கைதுகளில், அனைத்து சந்தேகநபர்களின் அடையாள ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் இருப்பதால் தேசிய பதிவு துறையுடன்  ஒத்துழைப்பில் மேலும் சரிபார்ப்பு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

போலிஸ் இந்த நடவடிக்கைகளை, சுற்றுலா ஈர்ப்பிட பகுதிகளில் கண்காணிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதாக சஜாலி தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset