செய்திகள் மலேசியா
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
காஜாங்:
எஸ்.பி.எம். தேர்வு எழுதாத மாணவர்கள் உட்பட மாணவர்கள் வருகையின்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாகக் கட்டாய இடைநிலைக் கல்விக் கொள்கை கருதப்படுகிறது.
கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 2025 எஸ்.பி.எம். தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 2024-ல் 6,246 ஆக இருந்ததிலிருந்து 5,032 ஆக குறைந்தாலும், எதிர்கால எஸ்.பி.எம். தேர்வில் முழு கலந்தேற்பை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சீடெக் கூறினார்.
"கட்டாய இடைநிலைக் கல்விக் கொள்கை ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இரண்டாவதாக எஸ்.பி.எம்.க்கு பிறகு கல்வியைத் தொடர, பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகையை மேம்படுத்த ஆதரவு திட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம்.
"எஸ்.பி.எம். தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது, ஆனால் மாநில கல்வி துறை, மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளி நிலைகளில் தீவிரமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் உள்ளன" என்று இன்று இங்கு காஜாங் மாநில இடைநிலைப் பள்ளியில் 2025 எஸ்.பி.எம். மாணவர்களை வாழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இதற்கிடையே, ஒட்டுமொத்த மாணவர் வருகையை அதிகரிக்க பல தொடர்ச்சியான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதாக ஃபாத்லினா மேலும் விளக்கினார்.
"சமூக-பொருளாதார உதவி உட்பட மாணவர்களுக்கான ஆதரவு அமைப்பு. பள்ளிக்கு செல்லாத ஏழை மாணவர்கள் உட்பட எல்லா வழிகளிலும் அமைச்சு உதவும்.
"மேலும், குறிப்பாக கல்வி நிலையை உயர்த்த நிதி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் மடானி ரக்யாட் டுயெசன் போன்ற பல திட்டங்கள் நடத்தப்படுகின்றன," என்றார் அவர்.
இந்த ஆண்டு, பள்ளியிலோ எஸ்.பி.எம். தேர்விலோ மாணவர் வருகை பிரச்சினையைத் தீர்க்க மேலும் சில நடவடிக்கைகளை அமைச்சு ஆராய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த செப்டம்பரில், மாநில அளவு வரை கட்டாயக் கல்வி கொள்கையை விரிவாக்கும் கல்வி மசோதா 2025 (திருத்தம்) சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆறாம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் படிப்பை கைவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த மலேசிய கல்வி வளர்ச்சி திட்டம் 2026-2035 வகுப்பதில் இந்த நடவடிக்கை முக்கியமானது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
