செய்திகள் மலேசியா
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
ஜொகூர் பாரு:
ஜொகூர் பாரு, கூலாய் முதல் செடெனாக் வரையிலான வடக்கு நோக்கிய விரைவுச்சாலையின் 40.6 கிலோமீட்டர் அடையாளப் பகுதியில், இன்று செவ்வாய்க்கிழமை ஒரு டிரெய்லரும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் காரணமாகச் சாலையின் அனைத்துத் தடங்களும் மறிக்கப்பட்டு, போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.30 மணியளவில் தொடங்கிய இந்தப் போக்குவரத்து நெரிசல், பிற்பகல் 1 மணி நிலவரப்படி சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டுள்ளது. இதனால் வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அந்தப் பாதையில் இன்னும் போக்குவரத்துச் சீராகவில்லை.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ள அவசரக்கால மீட்புப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்தப் பாதையைத் தவிர்க்க விரும்பும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஜொகூர் தீயணைப்பு, மீட்புத் துறை, குலாய் மாவட்டக் காவல்துறை தலைமையகத்திடம் இருந்து கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. உடனுக்குடன் நிலவும் போக்குவரத்து மாற்றங்களை அறிய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களைக் கவனிக்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
