செய்திகள் மலேசியா
மலேசியப் பொருளாதாரம் 5 விழுக்காடு வளர்ச்சி காணும்: மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தொடர் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், மலேசியாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் 4 முதல் 5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என மலேசிய தேசிய வங்கி கணித்துள்ளது. உள்நாட்டுத் தேவை, வலுவான நிதித்துறையின் காரணமாக நாடு இந்த வளர்ச்சியை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் அப்துல் கஃபூர் கடந்த 2025-ஆம் ஆண்டில் அறைகூவலான சூழலிலும் மலேசியா 5.2 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
கட்டுக்குள் இருக்கும் பணவீக்கம், நெகிழ்ச்சியான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைகள் மலேசியாவிற்குத் துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிலையான பணவியல் கொள்கை, நிதியியல் கட்டமைப்பு ஆகியவை வெளிநாட்டிலிருந்து வரும் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைக்க உதவுவதோடு, முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் வழிவகுத்துள்ளன.
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் எத்தகைய பொருளாதார அதிர்வுகளையும் எதிர்கொள்ள மலேசியா தயார் நிலையில் உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவின் பொருளாதார அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், உலகளாவிய சந்தையில் நாட்டின் நிலையை மேம்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆளுநர் அப்துல் ரஷீத் உறுதிபடத் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
