நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எனது பதவி விலகல் செய்தி; உண்மைக்கு புறம்பானது: நூருல் இசா

கோலாலம்பூர்:

கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார், தாம் பதவி விலகிவிட்டதாகக் கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார்.

ஆனால், முன்னதாகப் பரவிய வதந்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று அவர் வலியுறுத்தினார்.

கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கெஅடிலான் கட்சியின் இரண்டாவது முக்கியப் பதவியிலிருந்து நூருல் இஸா விலகுவார் என்ற யூகங்கள் இன்று அதிகாலை முதல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இது, குறிப்பாகக் கட்சி உறுப்பினர்களிடையே பல்வேறு எதிர்வினைகளுக்கு வழிவகுத்துள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த நூருல் இசா, கட்சி உறுப்பினர்களால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் தான் இன்னும் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

அதே நேரத்தில், தற்போதைக்கு கெஅடிலான் உயர்மட்டத் தலைமை அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset