நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சமரசம் கொள்ளாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சமரசம் கொள்ளாமல் கடும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவர்  டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட உயிரிழப்பு விபத்துகள் அதிகரிப்பதை டிஎஸ்கே அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

இதில், நேற்று ஒரு அப்பாவி உயிரிழந்த துயரச் சம்பவமும் அடங்கும்.

இந்தச் சம்பவம் மனதை நொறுக்குவது மட்டுமல்லாமல், அமலாக்க அதிகாரிகளின் பலவீனமும், ஒரு சில தரப்பினரின் பொறுப்பற்ற தன்மையும் மக்களின் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

ஆக இவ்விவகாரத்தில் எந்த சமரசமும் இன்றி கடுமையான, தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் போக்குவரத்து விதிமீறல் மட்டுமல்ல.

அது உயிர்களைப் பறிக்கும் ஒரு தீவிரமான குற்றமாகக் கருதப்படக்கூடிய செயலாகும்.

இதன் அடிப்படையில் டிஎஸ்கே அமைப்பு அரசாங்கத்தையும் அமலாக்க அதிகாரிகளையும் உடனடியாகச் செயல்படுமாறு ஒரு கோரிக்கைளை வலியுறுத்துகிறது:

- குற்றவாளிகளுக்கு எந்தவித கருணையும் இன்றி அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

- ஓட்டுநர் உரிமங்களை உடனடியாக நீக்கம் செய்வதுடன் நீண்ட கால ஓட்டுநர் தடை விதிக்கப்பட வேண்டும்.

- கடுமையான காயம் அல்லது மரணம் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்குப் பிணையில் வெளிவர முடியாத அபராதங்களைக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

- தற்போதுள்ள சட்டங்களைக் கடுமையாக்கி, உண்மையான தடுப்பாக மாற்றுவதற்காக அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் மேலும் பல துயரங்களையே வரவழைக்கும்.

நேற்று இழந்த உயிரை மீண்டும் கொண்டு வர முடியாது.

ஆனால் அது மேலும் தீர்க்கமான, பயனுள்ள நடவடிக்கைகளுக்கான ஒரு திருப்புமுனையை கொண்டு வர முடியும்.

மேலும் பொதுமக்களும் பொறுப்பற்றவர்களாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset