நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாங்கி லாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பாங்கி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் நிலங்களை கெசட் செய்வதில் ஏன் இழுப்பறி?: பன்னீர் செல்வம்

பாங்கி:

பாங்கி லாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பாங்கி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் நிலங்களை கெசட் செய்வதில் ஏன் இழுப்பறி ஏற்படுகிறது.

பாங்கி லாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர்  பன்னீர் செல்வம் இக்கேள்வியை எழுப்பினார்.

புரூம் எஸ்டேட் என அழைக்கப்பட்ட தோட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

எங்களின் முன்னோர்கள் இத்தோட்டத்தில் தான் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தான் இவ்வாலத்தை பராமரித்து வந்தனர்.

அதே வேளையில் இத்தோட்டத்தில் இருந்த பள்ளி தான் தற்போது பாங்கி தமிழ்ப்பள்ளியாக உள்ளது.

இவ்வாலயமும் பள்ளியும் கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும்.

ஆலயத்திற்கும் பள்ளிக்கும் நிலம் இருந்தாலும் அது முறைப்படி கெசட் செய்யப்படவில்லை.

இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவிடம் உதவிக் கோரினோம். அது தோல்வியில் முடிந்தது.'

அதன் பின் தற்போதை ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடுவை சந்தித்து இப்பிரச்சினைகளை விளக்கினோம். ஆனால் அதற்கும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவ்வட்டாரத்தில் புதியதாக ஒரு ஆலயத்திற்கு நிலப்பட்ட வழங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக கேள்விப்பட்டோம்.

ஆலயத்திற்கு நிலம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால்   புதிய ஆலயத்தை விட 80 ஆண்டுக் கால ஆலயத்தை தான் அவர்கள் காப்பாற்ற வேண்டும்.

ஆக  பாங்கி லாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பாங்கி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் நிலங்கள் கெசட் செய்வதற்கு ஆட்சிக் குழு உறுப்பினர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset