செய்திகள் மலேசியா
மதுபோதை, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை; விபத்தில் உயிரிழந்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
மதுபோதை, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக விபத்தில் உயிரிழந்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.
கிள்ளானில் நேற்று நடந்த உயிரிழப்பு விபத்தால் நான் மிகவும் வருத்தமடைகிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலைகளில் உயிரிழப்புகள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்றன. பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் இனி அப்பாவி உயிர்களைப் பறிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நாம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தும் வழக்குகளில், இழந்த உயிருக்கு நீதி கிட்டைக்கும் வகையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
சமீபத்தில், முற்றிலும் தவிர்க்கக்கூடிய ஒரு துயரச் சம்பவத்தால் ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் சிதைந்துள்ளது.
சாலைகள் அச்சம் நிறைந்த இடங்களாக மாற அனுமதிக்க முடியாது. எந்தவொரு மலேசியரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை வரக்கூடாது.
இத்தகைய வழக்குகளின் பரவலான அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, தற்போதுள்ள சட்டங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்து கடுமையாக்க வேண்டும் என்று அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.
போதையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துபவர்கள், இழந்த உயிரின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், முடிந்தவரை கடுமையான தடுக்கும் வகையிலான தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும்.
அதிவேக கேமராக்கள், அடிக்கடி சாலை சோதனைகள், போலிசாரின் வெளிப்படையான நடவடிக்கைகள் ஆகியவை இன்றியமையாதவை.
மேலும் சட்டரீதியான தண்டனைகள் அவசியமானவை என்றாலும், பாதுகாப்பான ஓட்டுதலையும் பொது விழிப்புணர்வையும் ஊக்குவிக்கும் ஒரு விரிவான அமைப்பு நமக்குத் தேவை.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 5:48 pm
வேலைக்குச் சென்றபோது நேர்ந்த விபரீதம்: எஸ்.பி.எம் மாணவரின் பரிதாப உயிரிழப்பு
March 30, 2026, 5:40 pm
மத்திய கிழக்குப் போர் எதிரொலி: ஏர்ஏசியா விமானக் கட்டணங்கள் உயர்கிறது
March 30, 2026, 5:35 pm
சர்வதேச நெருக்கடியிலும் தளராத நம்பிக்கை: சரவாக்கில் குவியும் வெளிநாட்டு முதலீடுகள்
March 30, 2026, 4:45 pm
பணமோசடி வழக்கில் விக்டர் சின் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்
March 30, 2026, 4:45 pm
நெக்ஸ்ஜி என்பது வெறும் பெருநிறுவன நாடகம் அல்ல; இதில் பெரிய பிரச்சினைகள் உள்ளன: ரபிசி
March 30, 2026, 4:00 pm
வெப்பம் அதிகரித்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பினாங்கு கல்வித் துறை அறிவிப்பு
March 30, 2026, 3:52 pm
