நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலைக்குச் சென்றபோது நேர்ந்த விபரீதம்: எஸ்.பி.எம் மாணவரின் பரிதாப உயிரிழப்பு

மூவார்: 

எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் ஒரு மாணவர், இங்கு பாரித் ஜாவா சிக்னல் விளக்கு சந்திப்பில் பேருந்துடன் விபத்தில் சிக்கி நேற்று உயிரிழந்தார்.

மாலை 6.51 மணிக்கு நடந்த இந்த விபத்தில் ஒரே மகனான 18 வயது பாதிக்கப்பட்டவர் கடுமையாக காயமடைந்து விபத்து இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

விபத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி, பாதிக்கப்பட்டவர் ஓட்டும் மோட்டார்சைக்கிள் சிக்னல் விளக்கு சந்திப்பில் திரும்பும் பேருந்தின் பக்கவாட்டில் மோதி கவிழ்ந்ததைக் காட்டியது.

பாரித் சுபாரி, ஜாலான் பாரித் யூசுஃப்பில்ல் உள்ள அட்-டினியா இடைநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான பாதிக்கப்பட்டவர், அருகிலுள்ள வேலையிடத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப விசாரணையில் பாத்து பஹட் திசையிலிருந்து மூவார் நகரை நோக்கி வந்த பேருந்து சிக்னல் விளக்கு சந்திப்பில் நிறுத்தியிருந்த போது விபத்து நடைபெற்றதாக கண்டறியப்பட்டதாக மூவார் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.

சிக்னல் விளக்கு பச்சையாக மாறியவுடன், பேருந்து ஓட்டுனர் இடது பக்கம் திரும்புவதற்குச் சிக்னல் கொடுத்தார், அப்போது பாதிக்கப்பட்டவர் ஓட்டும் மோட்டார்சைக்கிள் இடது பக்கத்தில் மோதியதாக அவர் தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டவர் விழுந்து தலை, உடலில் கடுமையான காயங்களடைந்து துணை மருத்துவக் குழுவினரால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது" என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41 (1)-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset