நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் செய்தி சேகரித்தது தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர் கைது

கோலாலம்பூர்:

தினத்தந்தி இணையதள செய்தியாளர்  காளிதாஸ் சுப்பிரமணியம் இன்று கெடா கூலிம் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் போலிசாரால் அத்துமீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த தகவலை அந்த இணையதளத்தின் இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து உறுதிப்படுத்தினார்.

இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்த தகவல் தமக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி காளிதாஸ் சுப்ரமணியம் உட்பட சில ஊடகவியலாளர்கள், சமூக ஏற்பாட்டாளர்கள், பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹைடேக் பார்க் பகுதிக்கு சென்றிருந்தார்.

அங்கு 300க்கும் மேற்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள்  வேலை செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை பற்றிய செய்தி சேகரிக்கவே அவர்கள் சென்றிருந்தனர்.

நாங்கள் சாதாரண  Blog influencer அல்ல. நாங்கள் தகவல் துறை (Jabatan Penerangan) உடன் பதிவு செய்யப்பட்டவர்கள். அதிகாரப்பூர்வ ஊடக அட்டை வைத்திருக்கிறோம்.

இந்த கைது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.

மேலும், காளிதாஸ் சுப்ரமணியம் இதற்கு முன்னர் கூலிம் போலிஸ் தலைமையகத்தில்  இருந்து வாக்குமூலம் அளிக்க அழைப்பு பெற்றிருந்தார்

போலிசார் அவரை தொடர்புகொண்டு வாக்குமூலம் அளிக்க வரச் சொன்னார்கள்.

காரணம் என்ன என்று கேட்டபோது, அத்துமீறல் குற்றச்சாட்டு தொடர்பானது என்று தெரிவித்தனர்.

ஆனால் இன்று அவர் காவல் நிலையத்திற்கு சென்ற பிறகு, மேல் விசாரணைக்காக கைது செய்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றார்.

இதற்கிடையில், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் , இந்த கைது நடவடிக்கைக்கு அதிருப்தி, அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒரு செய்தியாளராக தனது கடமையைச் செய்ததற்காக அவரை கைது செய்வது தேவையற்றது.

அவரிடம் வாக்குமூலம் பெறுவது போதுமானது என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset