நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025ஐ அமல்படுத்துவது குறித்து மாமன்னருக்கு விளக்கமளிக்கப்பட்டது: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள குடும்பங்கள், குழந்தைகளுக்கு இணையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025ஐ அமல்படுத்துவது குறித்து விளக்கமளிக்க மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று ஒப்புதல் அளித்தார்.

சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவின் மூலம்,

இங்குள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் நடைபெற்ற ஒரு சந்திப்பு அமர்வின் போது, ​​தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்  இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இணையத் தளங்களுக்கான தெளிவான பொறுப்புகளை அமைப்பதன் மூலம், குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதே இச்சட்ட அமலாக்கத்தின் நோக்கமாகும்.

கூடுதலாக, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பைப் பேணுவதற்காக, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளைத் திறப்பதைத் தடுக்கும் வயது சரிபார்ப்பு வழிமுறையை இது செயல்படுத்துகிறது என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவை ஃபஹ்மி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்கு மூலமாகவும் பகிர்ந்திருந்தார்.

ஜனவரி 1 அன்று தொடங்கிய இச்சட்டம் அமலாக்கம், இணைய பாதுகாப்பை மேம்படுத்தவும், பயனர்கள், குறிப்பாக குழந்தைகள்,  குடும்பங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒரு சட்டக் கட்டமைப்பை கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset