நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டிலிருந்தே கற்றல், கற்பித்தல் முறை மாணவர்களின் கல்வியை பாதிக்காது: வோங்

தைப்பிங்:

வெப்பமான வானிலையைத் தொடர்ந்து வீட்டிலிருந்தே கற்றல்,  கற்பித்தல் முறையைச் செயல்படுத்துவது மாணவர்களின்  கல்வியை பாதிக்காது.

மாறாக நேரடிக் கற்றலைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ கூறினார்.

இந்த கற்றல், கற்பித்தல் அணுகுமுறை புதியதல்ல.

உண்மையில் இது கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், இயற்கை பேரழிவுகள் போன்ற பல எதிர்பாராத சூழ்நிலைகளிலும் செயல்படுத்தப்பட்டது.

இது கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் இது  ஒரு பிரச்சனையல்ல, ஆனால் இந்தப் பிரச்சினையை நாம் கையாளும்போது முக்கியமானது.

நமது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset