செய்திகள் மலேசியா
விதிமீறிய இந்தோனேசிய ஊழியர்கள்: 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மீன்பிடிப் படகு பறிமுதல்
கோத்தா கினபாலு:
கோத்தா கினபாலு, மனுகான் தீவு அருகே முறையான வேலை அனுமதி இன்றி மீன்பிடிப் படகில் பணியாற்றிய 12 இந்தோனேசியப் பிரஜைகளை மலேசியக் கடற்படை அமலாக்க முகமையினர் கைது செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நகர்ந்த அந்தப் படகை அதிகாரிகள் இடைமறித்துச் சோதனையிட்டனர்.
கைது செய்யப்பட்ட 21 முதல் 54 வயதுடைய அந்த ஊழியர்கள், சமூக வருகை அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
இது 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். மேலும், அந்தப் படகு போதுமான ஊழியர்கள் இன்றி இயக்கப்பட்டதன் மூலம் 1952-ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தையும் மீறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த ஊழியர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டனர். அத்துடன், சுமார் RM2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அந்த மீன்பிடிப் படகும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுத் துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது.
குடிவரவு விதிகள், கடல்சார் பாதுகாப்புச் சட்டங்களை மீறுபவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சபா, லாபுவான் கடல்சார் இயக்குநர் முஹம்மத் கைருலனுவார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
