நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச உலமா மாநாட்டை மலேசியா ஜூனில் நடத்துகிறது

கோலாலம்பூர்: 

வரும் ஜூனில் உலகெங்கிலும் உள்ள சமய அறிஞர்களையும்  இஸ்லாமியத் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் சர்வதேச மாநாட்டை நடத்தவிருப்பதால், உலக இஸ்லாமிய சிந்தனை  ஒத்துழைப்பின் மையமாக மலேசியாவின் பங்கு மேலும் வலுப்படுகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் (சமய விவகாரங்கள்) டாக்டர் ஜுல்கிஃப்லி ஹசன் கூறினார். 

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாடு மலேசியா இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), உலக முஸ்லிம் லீக் (MWL) ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பின் விளைவாகும் என்று தெரிவித்தார்.

மக்கா, ஜெட்டா, ரியாத் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய தனது அரசுமுறைப் பயணத்தில் உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முஹம்மத் அப்துல்கரீம் அல்-இஸ்ஸாவின் அழைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த பயணம் சகோதரத்துவத்தை  ஒன்றிணைக்கும் நோக்கை கொண்டதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய ஒத்துழைப்பிற்கான இடத்தை அடையும். மேலும் பிரதமர் துறையின் உள்ள இஸ்லாமிய சமய விவகாரங்கள் துறை மிகப்பெரிய அமைப்புகளுடன் இணைந்த பாரிய பணியை ஒருங்கிணைக்கும் முயற்சியாகும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அறிவுள்ள சமூகத்தை உருவாக்கி, சகோதரத்துவத்தை வலுப்படுத்தி, உம்மாவின் மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறத் தயாராக வேண்டும் என்று ஜுல்கிஃப்லி முஸ்லிம் சமூகத்தை வலியுறுத்தினார்.

முஹம்மத் அப்துல்கரீம் அவர்கள் நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமைச், சர்வதேச சமூகத்தின் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளராக கருதுவதாக தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset