செய்திகள் மலேசியா
சபாவில் சாலை மேம்பாடு, நீர், மின்சார விநியோகம் மேம்படுத்தப்பட வேண்டும்: மூஸா அமான்
கோத்தா கினாபாலு:
சபா மாநில முதலமைச்சரான துன் மூஸா அமான், சபாவில் சாலைகள், சுத்தமான நீர் விநியோக அமைப்பு, நிலையான மின்சாரம் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இன்று தனது 75-வது அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு அறிக்கையில், மக்கள் நலன் எப்போதும் பேணப்படுவதை உறுதிப்படுத்த இந்த முயற்சி மிகவும் முக்கியமானது என்று மூஸா கூறினார்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளுக்கிடையே தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்தவும் இந்த மூன்று அடிப்படை வசதிகளும் முக்கியமானவை என்று அவர் தெரிவித்தார்.
"திட்டமிட்டு நிலைத்த உள்கட்டமைப்பு வளர்ச்சி, எந்தச் சமூகமும் முன்னேற்றத்தின் அலையிலிருந்து பின்தங்காமல் இருப்பதை உறுதிசெய்து மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக மாறும்" என்று இஸ்தானா ஸ்ரீ கினாபாலுவில் இன்று அவர் கூறினார்.
தற்போதைய தொழில் சந்தை தேவைகளுக்கு இணங்க அறிவாளிகளான, உயர் திறன் கொண்ட, போட்டித்திறன் வாய்ந்த இளைய தலைமுறையை உருவாக்க கல்வி, மனித மூலதன வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் முஸா வலியுறுத்தினார்.
தரமான மருத்துவ வசதிகள், முழுமையான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் நலனை உயர்த்துவதற்கான சுகாதார அம்சத்திலும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
தன் அறிக்கையில், சபாவின் நிலைத்தன்மை, முன்னேற்றத்திற்காக சபா மக்கள் அனைவரும் ஒற்றுமையைப் பேணவும், நேர்மையை வலுப்படுத்தவும், தனிப்பட்ட நலன்களை விட மாநிலத்தின் நலனை முன்னுரிமைப்படுத்தவும் மூஸா வலியுறுத்தினார்.
"சபா மாநிலம் பல சவால்களையும் மாற்றங்களையும் கடந்துவந்தது. ஆனால், அரசாங்கமும் மக்களும் இணைந்து செயல்பட்டதால், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் மிகவும் உள்ளடக்கிய, சமநிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சமூக நலனை மேம்படுத்தவும் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
சமீபத்திய சில ஆண்டுகளில் சபா பொருளாதாரம், முதலீடு, உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகிய துறைகளில் உற்சாகமளிக்கும் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விவசாயம், சுற்றுலா, தொழில்துறை, மாநில வளத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார அடித்தளத்தை உறுதிப்படுத்த பல முன்முயற்சிகள் செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
பொது சேவை வழங்கலில் டிஜிட்டல் மாற்றம் செயல்படுத்தப்படுவதை திறன், வெளிப்படைத்தன்மை, மக்களுக்கான அணுகல் எளிமையை அதிகரிப்பதாக கருதுவதாகவும், அரசாங்க சேவைகளை மிகவும் விரைவான, துல்லியமான, பயனுள்ளதாக மாற்றுவதாகவும் தெரிவித்ததில் தனது மகிழ்ச்சியையும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மக்களால் மதிக்கப்படும், நம்பப்படும் நிர்வாகத்தை உருவாக்கும் முயற்சியில் பொது சேவையில் நேர்மையை வலுப்படுத்துவது எப்போதும் முன்னுரிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் முஸா வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 5:48 pm
வேலைக்குச் சென்றபோது நேர்ந்த விபரீதம்: எஸ்.பி.எம் மாணவரின் பரிதாப உயிரிழப்பு
March 30, 2026, 5:40 pm
மத்திய கிழக்குப் போர் எதிரொலி: ஏர்ஏசியா விமானக் கட்டணங்கள் உயர்கிறது
March 30, 2026, 5:35 pm
சர்வதேச நெருக்கடியிலும் தளராத நம்பிக்கை: சரவாக்கில் குவியும் வெளிநாட்டு முதலீடுகள்
March 30, 2026, 4:45 pm
பணமோசடி வழக்கில் விக்டர் சின் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்
March 30, 2026, 4:45 pm
நெக்ஸ்ஜி என்பது வெறும் பெருநிறுவன நாடகம் அல்ல; இதில் பெரிய பிரச்சினைகள் உள்ளன: ரபிசி
March 30, 2026, 4:00 pm
வெப்பம் அதிகரித்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பினாங்கு கல்வித் துறை அறிவிப்பு
March 30, 2026, 3:52 pm
