செய்திகள் மலேசியா
விவசாய உள்ளீடுகளில் ஒரே வழங்குனரை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: டத்தோ டாக்டர் அஸ்மான்
ஷா ஆலம்:
உர, சோளம், சோயா போன்ற மூலோபாய உள்ளீடுகளுக்குப் பல மூல விநியோக ஒப்பந்தங்கள், அரசாங்கங்களுக்கு இடையேயான (G2G) பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரே வழங்குனரைச் சார்ந்திருப்பதை மலேசியா குறைக்க வேண்டும்.
இறக்குமதி உள்ளீடுகளை, குறிப்பாக கால்நடை, கோழி துறைகளில் அதிகமாக சார்ந்திருப்பது மலேசியாவின் உணவு அமைப்பின் மிகப்பெரிய பலவீனமாகும் என்று பாஸ் விவசாயம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குழுவின் (லத்தாஸ்) தலைவர் டத்தோ டாக்டர் அஸ்மான் இப்ராஹிம் கூறினார்.
மலேசியா கால்நடை தீவன பொருட்களான சோளம், சோயாவை முக்கிய கூறுகளில் 98 முதல் 100 சதவீதம் வரை முழுமையாக இறக்குமதியைச் சார்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
"இந்தச் சார்ந்திருப்பு, இன்று நிகழ்வதைப்போல் மோதல் ஏற்படும் போது கால்நடை துறையும் பாதிக்கப்படும் என்று பொருளாகும்.
"இது நாட்டின் விவசாய அமைப்பு, உணவு பாதுகாப்பின் எதிர்ப்புத்திறனின் சோதனையாகும்" என்று அவர் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
விலை அதிர்ச்சி, விநியோக இடையூறுகளைக் குறைக்க முக்கிய பொருட்களுக்கான கட்டாய உர இருப்பு, கால்நடை தீவன உள்ளீட்டு இருப்பை உருவாக்குவது லத்தாஸின் பரிந்துரைகளில் ஒன்றாக இருப்பதாகவும் அஸ்மான் மேலும் தெரிவித்தார்.
உள்ளூர் உள்ளீட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தெளிவான இலக்குகளை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
"மேலும், தரவு அடிப்படையிலான இலக்கு உள்ளீட்டு ஆதரவு திட்டம் தேவை. மானியங்கள் சிறு விவசாயிகளையும் அடிப்படை உணவு உற்பத்தியாளர்களையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும், உண்மையான இயக்க செலவு அடிப்படையிலும் விரைவான, வெளிப்படையான விநியோக வழிமுறையுடனும் இருக்க வேண்டும்.
"இறுதியாக, உர விலை உயர்வு பருவகால பிரச்சினையல்ல. மலேசியாவின் உணவு அமைப்பைப் பொருளாதார பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலாக வலுப்படுத்த வேண்டும் என்ற அறிகுறியாகும்.
"அரசாங்கம் வெறும் கருத்து நிர்வாகத்திற்கு பதிலாக கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவுபடுத்தினால், மலேசியால் உணவு விலை அழுத்தத்தைக் குறைத்து மக்கள் நலனுக்காக மிகவும் இறையாண்மையான உணவு பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.
மேலும் விளக்கமளித்த அவர், நெருக்கடி மறுமொழி "அவசர திட்டங்கள்", தெளிவான முக்கிய செயல்திறன் குறியீடுகள் (KPI) இல்லாத நிர்வாகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படக்கூடாது என்று லத்தாஸ் கருதுவதாக தெரிவித்தார்.
விவசாய உள்ளீட்டு நெருக்கடியில், உர குறிப்பு விலை இலக்கு, இருப்பு இலக்கு, விநியோக காலம், விலை உயரும் போது தலையீட்டு வழிமுறை போன்ற குறியீடுகள் நாட்டிற்குத் தேவை என்று அவர் கூறினார்.
"இரண்டாவதாக, கால்நடை தீவன இறக்குமதி சார்பு, மக்களை வெறும் பொது அழைப்பாக பயிரிட ஊக்குவிப்பதற்குப் பதிலாக மிகவும் யதார்த்தமான, படிப்படியான அபாய குறைப்பு திட்டத்தைக் கோருகிறது" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 12:50 pm
அனுமதி இன்றி செயல்பட்ட மலையேற்ற நடவடிக்கை: கோம்பாக் காப்பகக் காட்டில் 92 பேர் கைது
March 30, 2026, 12:15 pm
தலைமை நீதிபதி, ஐ.ஜி.பி-க்கு சபாவின் உயரிய கௌரவம்
March 30, 2026, 11:49 am
மானிய விலைச் சமையல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: லஹாட் டத்துவில் 61 வயது ஆடவர் கைது
March 30, 2026, 11:25 am
இஸ்திஸ்காரா தொழுகைக்குக் கிடைத்த பலன்: 100 நாள் தாகம் தீர்த்த வான்மழை
March 30, 2026, 11:04 am
