செய்திகள் மலேசியா
தலைமை நீதிபதி, ஐ.ஜி.பி-க்கு சபாவின் உயரிய கௌரவம்
கோத்தா கினாபாலு:
எண்ணெய், எரிவாயு, தொழில்நுட்ப துறைகளில் கார்ப்பரேட் பிரமுகரான டத்தோ அப்துல் ஃபாரிஷ் அப்துல் ரஷீத், நாளை நடைபெறும் சபா முதலமைச்சர் துன் மூஸா அமானின் 75-வது அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விருதுகளையும் சபாவின் உயரிய பட்டங்களையும் பெறும் 1,026 பேரின் பட்டியலைத் தலைமை தாங்குகிறார்.
எஃப்சோ வென்ச்சர்ஸின் மேலாண்மை இயக்குநரான அவர், டத்தோ ஸ்ரீ பாங்லிமா என்ற பட்டத்தை தாங்கும் சபாவின் மிக உயர்ந்த பட்டமான செரி பாங்லிமா டர்ஜா கினாபாலு (எஸ்.பி.டி.கே ) பெறும் மூன்று நபர்களில் ஒருவராவார்.
எஸ்.பி.டி.கே பெறும் மற்ற இரண்டு நபர்கள் தேசிய போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில், தலைமை நீதிபதி டத்தோ ஸ்ரீ வான் அஹ்ம்மத் ஃபாரிட் வான் சாலே ஆவர்.
இதற்கிடையே, டத்தோ என்ற பட்டத்தை தாங்கும் சபாவின் இரண்டாவது உயர்ந்த பட்டமான பாங்லிமா கெமிலாங் டர்ஜா கினாபாலு (பி.ஜி.டி.கே) 79 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 12:56 pm
விவசாய உள்ளீடுகளில் ஒரே வழங்குனரை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: டத்தோ டாக்டர் அஸ்மான்
March 30, 2026, 12:50 pm
அனுமதி இன்றி செயல்பட்ட மலையேற்ற நடவடிக்கை: கோம்பாக் காப்பகக் காட்டில் 92 பேர் கைது
March 30, 2026, 11:49 am
மானிய விலைச் சமையல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: லஹாட் டத்துவில் 61 வயது ஆடவர் கைது
March 30, 2026, 11:25 am
இஸ்திஸ்காரா தொழுகைக்குக் கிடைத்த பலன்: 100 நாள் தாகம் தீர்த்த வான்மழை
March 30, 2026, 11:04 am
