நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மது, போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதியானது: போலிஸ்

கிள்ளான்:

மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மது, போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதியானது.

தென் கிள்ளான் போலிஸ் தலைவர் லிம் ஜிட் ஹுவே இதனை கூறினார்.

நேற்று காலை கிள்ளானில் உள்ள ஜாலான் ராயா பாரத் சாலையில் நடந்த ஒரு விபத்தில் மது, போதைப்பொருள் போதையில் இருந்த ஒரு நபர் ஓட்டி வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

காலை சுமார் 11.40 மணியளவில் நடந்த இந்த விபத்தில், மோதலின் தாக்கத்தால் 30 வயதுகளில் இருந்த அந்த நபர் மற்றொரு காரின் மீது தூக்கி வீசப்பட்டார்.

20 வயதுள்ள உள்ளூர் நபர் ஒருவர் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி கார், அதிவேகமாகவும் அபாயகரமாகவும் ஓட்டப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஓட்டுநர் முன் சென்ற பல வாகனங்களை முந்திச் சென்ற பிறகு, எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்து எதிர் திசையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக நம்பப்படுகிறது.

இந்த மோதலின் விளைவாக, 30 வயதுள்ள உள்ளூர்வாசியான பாதிக்கப்பட்டவர், ஒரு பெரோடுவா மைவி மீது தூக்கி வீசப்பட்டார். 

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என உறுதிசெய்யப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset