செய்திகள் மலேசியா
தமிழ் மொழிக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அர்ப்பணிப்பு சேவையுடன் பணியாற்றியவர் செங்குட்டுவன்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
தமிழ் மொழிக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அர்ப்பணிப்பு சேவையுடன் பணியாற்றியவர் செங்குட்டுவன் வீரன்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இவ்வாறு பாராட்டினார்.
கல்வித் துறையில் பணி ஓய்வு பெற்ற சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஓர் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கி, உழைப்பின் மூலம் கல்வித் துறையில் உயர்ந்த பொறுப்பான உதவி இயக்குநர் பதவியை அவர் அடைந்தார்.
கல்வி வளர்ச்சி, மாணவர்களின் முன்னேற்றம், சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவை செய்து தமிழுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சி என்பது ஒரு மொழியின் வளர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் மரியாதையும், அடையாளமும் ஆகும்.
அந்த அடையாளத்தை உயர்த்திப் பாதுகாத்து, தமிழ் மொழிக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ய செங்குட்டுவன் வீரனின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 7:42 pm
மஇகாவின் நிலைபாடு குறித்து தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பப்படும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 29, 2026, 7:40 pm
பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் பேரா குழு மீண்டும் களத்தில் இறங்குகிறது: டத்தோஸ்ரீ இருதயநாதன்
March 29, 2026, 4:39 pm
எரிபொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகக் களமிறங்கிய உள்நாட்டு வணிக அமைச்சகம்
March 29, 2026, 4:27 pm
கிளந்தானில் சுட்டெரிக்கும் வெயில்: 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து
March 29, 2026, 4:11 pm
