செய்திகள் மலேசியா
திட்டமிட்ட கொலையா?: 4 நாட்களாகக் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
கூலிம்:
கெடா மாநிலத்தின் கூலிம் தோட்டப் பகுதியில் நபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் 2.25 மணியளவில் பறவை பிடிக்கச் சென்ற பொதுமக்கள் சிலர், அங்குள்ள மலைப் பகுதியில் உடல் ஒன்று அழுகிய நிலையில் எரிந்து கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்திற்கு அருகிலேயே எரிந்த நிலையில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.
அந்த மோட்டார் சைக்கிளைக் கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 77 வயதுடைய முதியவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என்று அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இருப்பினும், சடலம் சிதைந்துள்ளதால் உயிரிழந்தவரின் உண்மையான அடையாளத்தை உறுதி செய்ய டி.என்.ஏ பரிசோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை 1 மணியளவில் 22, 68 வயதுடைய இரண்டு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துக் கூலிம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுல்கிப்லி அஜிசான் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
