செய்திகள் மலேசியா
31 கிலோ கிராம் தங்கக் கட்டியை கொண்டுள்ள பப்ளிக் கோல்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது
கோலாலம்பூர்:
நாட்டில் 31 கிலோ கிராம் தங்கக் கட்டியை கொண்டுள்ள பப்ளிக் கோல்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.
மலேசியாவின் மிகப்பெரிய தங்கக் கட்டி என்ற பிரிவில் அந்த நிறுவனம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்தச் சாதனை, மலேசியாவில் தங்கம், விலைமதிப்புள்ள உலோகங்கள் துறையில் சிறப்பையும் புதுமையையும் முன்னெடுத்துச் செல்வதில் பப்ளிக் கோல்டின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த அதிகாரப்பூர்வ அங்கீகார விழா மெனாரா பப்ளிக் கோல்ட்டில் நடைபெற்ற சீனப்புத்தாண்டு, நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை ஒட்டி நடத்தப்பட்டது.
இதில் வாடிக்கையாளர்கள், வணிகப் பங்காளர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த அங்கீகாரத்தை மலேசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு அதிகாரியான சித்தி நூர்ஹானிம் வழங்கினார்.
பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ லூயிஸ் எங், அரோரா இத்தாலியா இன்டர்நேஷனல் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குநர் டத்தின்ஸ்ரீ இவோன் லிம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பப்ளிக் கோல்ட் என்பது மலேசியாவின் ஒரு முன்னணி விலைமதிப்புள்ள உலோகங்கள் நிறுவனமாகும்.
இது தங்கக் கட்டிகள், நகைகள், சேகரிக்கக்கூடிய தங்கப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்று, உலகளவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
ஒரு வலுவான உள்நாட்டு அடித்தளத்தின் மூலம் பப்ளிக் கோல்ட் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனது இருப்பைக் கொண்டு, துபாய், லண்டன் உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது தடத்தை விரிவுபடுத்தி, வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
உலகளாவிய தங்க உரிமையை ஜனநாயகப்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, இந்நிறுவனம் உற்பத்தி, வர்த்தகம், விநியோகம் வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த விலைமதிப்புள்ள தங்க சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி உள்ளது என்று டத்தோஸ்ரீ லூயிஸ் எங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 7:42 pm
மஇகாவின் நிலைபாடு குறித்து தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பப்படும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 29, 2026, 7:40 pm
பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் பேரா குழு மீண்டும் களத்தில் இறங்குகிறது: டத்தோஸ்ரீ இருதயநாதன்
March 29, 2026, 4:39 pm
எரிபொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகக் களமிறங்கிய உள்நாட்டு வணிக அமைச்சகம்
March 29, 2026, 4:27 pm
கிளந்தானில் சுட்டெரிக்கும் வெயில்: 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து
March 29, 2026, 4:11 pm
