நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் பேரா குழு மீண்டும் களத்தில் இறங்குகிறது: டத்தோஸ்ரீ இருதயநாதன்

ஈப்போ:

கடந்த 86 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பரதன் கிண்ண கால் பந்துப் போட்டியில் இந்த ஆண்டு பேரா விளையாட்டாளர்கள் களத்தில் இறங்குவர்.

பேரா மாநில இந்தியர் விளையாடுப் பேரவையின்  தலைவர் டத்தோஸ்ரீ க. இருதய நாதன் இதனை கூறினார்.

தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த ஆண்டு இப்போட்டியில்ல பேரா விளையாட்டாளர்கள்  பங்கேற்கவில்லை.

இந்த ஆண்டு கிண்ணத்தை வெள்ள திறமையான விளையாட்டாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

இது வரை பரதன் கிண்ண கால் பந்துப்போட்டடியில்  சிலாங்கூருக்கு அடுத்து  அதிகமாக பரதன் கிண்ணத்தை வென்ற மாநிலமாக பேரா விளங்குகிறது.

இந்த பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்ற பல பேரா  விளையாட்டார்கள் அடையாளம் கண்டு மாநிலம் மற்றும் தேசிய நிலைக்கு தேர்வாகியதை நினைவுக் கூர்ந்தார்.

ஈப்போ, புந்தோங் ஜெயாவில் நடைபெற்ற பரதன் கிண்ண பேரா குழுவின் ஜெர்சி அறிமுக நிகழ்வில்  டத்தோஸ்ரீ க. இருதய நாதன் இவ்வாறு பேசினார்.

இதில் கால்பந்து பயிற்றுனர்  டத்தோ கருத்து பேசியபோது,

தோல்வியை கண்டு துவண்டு விடவேண்டாம் தொடர்ந்து முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இதில் பேசிய  பேரா பரதன் கிண்ண பயிற்றுனர் சஞ்சிவ்குமார் நாயுடு , இப்போட்டியில் பேரா குழுவில்  நல்ல திறமையான விளையாட்டாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

நிச்சயம் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பேரா விளையாட்டுப் பேரவைக்கு பெருமையை தேடிதருவார்கள் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.

பேரா குழுவுக்கு ஊக்கம்  அளிக்கும் வகையில்  பலர் உதவிகள் வழங்கியுள்ளனர் .

மேலும் பேரா குழுவின் வெற்றிக்கு தொடர் ந்து அயராது உழைத்து வரும் இக்குழுவின் துணை பயிற்றுனர் புகழ், துணை நிர்வாகி யுவராஜன் உட்பட அனைவருக்கும்  அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset