செய்திகள் மலேசியா
மஇகாவின் நிலைபாடு குறித்து தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பப்படும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
போர்ட்டிக்சன்:
இருட்டில் இருக்கும் போது சிலர் பல மாதிரி தான் பேசுவார்கள்.
ஆனால் மஇகாவின் நிலைபாடு குறித்து தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பப்படும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
கடந்தாண்டு நடைபெற்ற பேராளர் மாநாட்டில் மஇகா தேசிய முன்னணியில் இருந்து விலகி தேசியக் கூட்டணியில் இணைய வேண்டும் என பேராளர்கள் வலியுறுத்தினார்.
அதே வேளையில் இது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை மத்திய செயலவைக்கு அவர்கள் வழங்கினர்.
அண்மையில் கூடிய மத்திய செயலவை தற்போதைக்கு தேசிய முன்னணி ஆதரிப்போம் என முடிவெடுத்தது.
இந்த முடிவுக்கு காரணம் தேசியக் கூட்டணியின் தலைமைத்துவம் ஆகும்.
அப்போது பெர்சத்து கட்சி அக்கூட்டணிக்கு தலைமையேற்றது. ஆனால் இப்போது பாஸ் வசம் அக்கூட்டணி உள்ளது.
இதனால் பாஸ் கட்சிக்கு கெட்டது என்று நான் சொல்லவில்லை.
மாறாக இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பது குறித்து கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடம் கேட்க வேண்டி உள்ளது.
அதன் அடிப்படையில் தான் மத்திய செயலவை இம்முடிவை எடுத்தது.
ஆனால் இவ்விவகாரம் பல மாதிரி பேசி வருகின்றனர். இருட்டில் இருக்கும் அப்படி தான் பேசுவார்கள்.
ஆனால் மஇகாவின் நிலைபாடு குறித்து தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 7:40 pm
பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் பேரா குழு மீண்டும் களத்தில் இறங்குகிறது: டத்தோஸ்ரீ இருதயநாதன்
March 29, 2026, 4:39 pm
எரிபொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகக் களமிறங்கிய உள்நாட்டு வணிக அமைச்சகம்
March 29, 2026, 4:27 pm
கிளந்தானில் சுட்டெரிக்கும் வெயில்: 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து
March 29, 2026, 4:11 pm
