நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்

கோத்தா பாரு: 

முழுமையாக அணைக்காமல் எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது கிளந்தானில் தீ விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.

முதலமைச்சர் டத்தோ முஹம்மத் நசுருதீன் தாவுத், வறட்சி காலத்தில் பல தீ விபத்துக்கள் நேர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

"வறட்சி காலத்தை முன்னிட்டு, முக்கியமான காரியம் இல்லாமல் குறிப்பாக கடுமையான வெயிலில் நண்பகல் நேரத்தில் வெளியே செல்லாமல் உடல் நலனைப் பேணுமாறு கிளந்தான் மக்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

"பல தீ விபத்துக்கள் நடப்பதைக் காண்கிறோம், காய்ந்த புதர்கள், புல்வெளிகளில் சில நேரங்களில் சிகரெட் துண்டுகளை எறிகிறார்கள், அச் செயல் சிறிய நெருப்பாக தொடங்கி பரவுகிறது.

"மெராந்தி பள்ளிவாசல் செல்லும் வழியிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது, ஆனால் தீயணைப்பு படையினரின் விரைவான நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது" என்று இன்று இங்கு நடைபெற்ற பாஸ் கிளந்தான் ஐதில்ஃபித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சந்தித்த போது அவர் கூறினார்.

எனவே, சிகரெட் துண்டுகளை எறிவதற்கு முன்பு முழுமையாக அணைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும், தீ விபத்துக்கு வழிவகுக்கக்கூடிய வெளிப்புற எரிப்பை மேற்கொள்ளாமலிருக்குமாறும் கிளந்தான் மக்களை முஹம்மத் நாசுருதீன் அறிவுறுத்தினார்.

"நிலவும் வறட்சி காலத்தால் மாநிலத்தில் ஆற்று நீர்மட்டமும் குறைந்துள்ளது, கிணறுகளும் வறண்டு வருகின்றன.

"மாநில அரசாங்கம் தேவான் உலமா மூலம் மழை வேண்டி இஸ்திஸ்காரா தொழுகை நடத்த திட்டமிட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset