நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 95 அளவு மாற்றத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படவில்லை; கூடுதல் செலவு ஏதும் இல்லை: சைபுடின்

கோலாலம்பூர்:

பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 அளவு மாற்றத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படவில்லை.

அதே வேளையில் கூடுதல் செலவு ஏதும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

இந்த நாட்டில் சுமார் 90 சதவீத மக்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 100 லிட்டர் எரிபொருளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இதனால் ரோன் 95 ஒதுக்கீட்டில் செய்யப்படும் மாற்றத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பத்து பேரில் ஒன்பது பேர் எனும் பெரும்பான்மையான மக்களின் அன்றாட வாழ்க்கை, எந்தவொரு கூடுதல் செலவும் இன்றி வழக்கம் போல் தொடரும் என்பதே இதன் பொருள் என்று நம்பிக்கை கூட்டணி பொதுச் செயலாளருமான அவர்  கூறினார்.

ஏப்ரல் 1 முதல், பூடி 95 ஒதுக்கீட்டுத் தகுதி வரம்பை மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராக மாற்றுவது,  உலக நிலைமை ஸ்திரத்தன்மைக்குத் திரும்பும் வரை மட்டுமே தற்காலிகமானது.

இ-ஹெய்லிங் ஓட்டுநர்களும் கவலைப்படத் தேவையில்லை.

ஏனெனில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மாதத்திற்கு 800 லிட்டர் என்ற ஒதுக்கீடு பராமரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset