செய்திகள் மலேசியா
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது; மக்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் நம்பிக்கை
புத்ராஜெயா:
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோலின் தகுதி அளவு மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
இம்மாற்றம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
மேலும் இந்தத் தற்காலிக மாற்ற நடவடிக்கையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு கவனமாகவும் விவேகமாகவும் எடுக்கப்பட்டது.
சந்தை, எண்ணெய் விநியோகம், உலகப் பொருளாதாரம் ஆகியவை ஸ்திரத்தன்மைக்குத் திரும்பும் வரை இந்த மாற்ற நடவடிக்கை தற்காலிகமானது.
ஆனால் இதுவரை மீட்சிக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் பிரதமர் ஒப்புக் கொண்டார்.
புரிந்து கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பை நான் மனப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நம்மால் தவிர்க்க முடியாத பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விளக்கங்களையும் சிலர் முன்வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆனால் என்னை நம்புங்கள், மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாவதை நான் விரும்பவில்லை.
மேலும் எங்கள் நடவடிக்கைகள் மிகவும் முழுமையானவை. விவேகமானவை.
எனவே, பலரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருந்தது என்பதை மக்களே, நண்பர்களே, புரிந்துகொள்ளுங்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 10:08 pm
பத்துமலையில் தேசிய ஆலய கருத்தரங்கு; டான்ஸ்ரீ நடராஜா தொடக்கி வைப்பார்: டத்தோ சிவக்குமார்
March 26, 2026, 10:04 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:52 pm
டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
