செய்திகள் மலேசியா
பத்துமலையில் தேசிய ஆலய கருத்தரங்கு; டான்ஸ்ரீ நடராஜா தொடக்கி வைப்பார்: டத்தோ சிவக்குமார்
பத்துமலை:
தேசிய ஆலய கருத்தரங்கை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தொடக்கி வைப்பார்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாட்டில் உள்ள இந்து ஆலயங்களையும் இயக்கங்களையு. ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் மஹிமாவின் முதன்மை நோக்கமாகும்.
இதன் மூலம் ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.
இதன் அடிப்படையில்தான் நாடு தழுவிய நிலையில் மஹிமாவின் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேசிய அளவிலான ஆலய கருத்தரங்கை மஹிமா ஏற்பாடு செய்துள்ளது.
இக்கருத்தரங்கு வரும் ஏப்ரல் 11ஆம் தேதி காலை 9 மணி முதல் பத்துமலையில் நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், டிஎஸ்கே குழு, கியூமிக் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இக்கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார்.
தேசிய நில குறியீடு, நகர், கிராம திட்டமிடல் சட்டத்தை ஆலய நிர்வாகங்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.
குறிப்பாக இச்சட்டம் குறித்து முழுமையாக புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக ஆலய நிர்வாக இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு டத்தோ சிவக்குமார் கேட்டு கொண்டார்.
இக்கருத்தரங்கு குறித்த மேல்விவரங்களுக்கு 0179175072 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 10:11 pm
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது; மக்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் நம்பிக்கை
March 26, 2026, 10:04 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:52 pm
டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
