நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார். 

மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று மாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.

பொதுத்துறை மட்டுமின்றி, பல நிறுவனங்கள், வங்கிகளால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளை தனியார் துறையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் மோதலால் ஏற்பட்ட தாக்கம், அதன் விளைவாக எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளை டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset