நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்

புத்ராஜெயா:

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மானிய விலையில் வழங்கப்படும் ரோன் 95 பெட்ரோல் அளவை 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்படும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

தகுதியுள்ளவர்களுக்கு பூடி 95 திட்டத்தின் கீழ் மக்களுக்கு மானிய விலையில் ரோன் 95 பெட்ரோலை அரசாங்கம் வழங்கி வருகிறது.

குறிப்பாக தகுதியுள்ளவர்களுக்கு மாதந்தோறும் 300 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது 

தற்போது இந்த பெட்ரோலின் அளவு 300 லிட்டரில் இருந்து 200 லிட்டராக குறைக்கப்படுகிறது.

மேற்காசிய நாடுகளில் நடக்கும் பதற்றங்கலை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இருந்தாலும் பூடி 95 திட்டத்தின் கீழ் பெட்ரோலின் விலை 1.99 ரிங்கிட்டாக அரசு நிலை நிறுத்துகிறது.

இன்று நேரடி ஒளிப்பரப்பில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset