நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை

கோலாலம்பூர்:

கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, தொழிலதிபர் விக்டர் சின்னிடம் உறுதியான ஆதாரம் இருக்கலாம்.

முன்னாள் அமைச்சர்  ரபிலி இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

நேற்று இரவு யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு சிறிய காணொளியில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடனான தனது உரையாடலை விக்டர் சின் பதிவு செய்திருக்கலாம் என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்தினார்.

எனவே, சம்பந்தப்பட்ட தொழிலதிபர், அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு மார்ச் 30 வரை இறுதி எச்சரிக்கையும் காலக்கெடுவும் விதிக்கலாம், இல்லையெனில் அவரது பெயர் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

கெஅடிலான்  நாடாளுமன்ற உறுப்பினரால் நம்பப்பட்ட நபர் அவர் சார்பாகப் பணத்தைப் பெற்றபோது, ​​புகைப்படங்கள் அல்லது காணொளிப் பதிவுகள் வடிவில் ஆதாரம் இருக்க வாய்ப்புள்ளது.

இல்லையென்றால், சின் இதுபோன்ற ஒரு இறுதி எச்சரிக்கையை விடுக்கத் துணிந்திருக்க மாட்டார் என்று ரபிசி கூறினார்.

விக்டர் சின் வழங்கிய காலக்கெடு இன்னும் சில நாட்களில் முடிவடையும்போது ரபிசி இரண்டு சாத்தியக்கூறுகளையும் தெரிவித்தார்.

அப்போது, ​​மார்ச் 30 அன்று சின் அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை வெளியிடலாம். அல்லது கோரப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கும் வரை காத்திருப்பது வீண் தான் என்று ரபிசி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset