நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு

கோலாலம்பூர்:

குடியிருப்பாளர்கள் பிரதிநிதி மன்ற உறுப்பினர் ஒருவர் உடம்பு பிடி மைய நடத்துனரிடம் பாதுகாப்புப் பணம் கேட்டதாகக் கூறும் வைரல் காணொளி தொடர்பாக, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

காணொளியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும்.

குற்றச்சாட்டுகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட  உறுப்பினர் எந்தவித சமரசமும் இன்றி உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.

எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எந்தவிதமான பாதுகாப்புப் பணத்திற்கோ அல்லது இடைத்தரகர்களின் நடைமுறைக்கோ சகிப்புத்தன்மை இல்லை என்று  ஹன்னா இயோ முகநூல் பதிவில் கூறினார்.

என்னை பொறுத்தவரை, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான விஷயங்களில் எந்த விதமான பாதுகாப்புப் பணத்தையோ அல்லது இடைத்தரகர்களின் பயன்பாட்டையோ அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது.

தகவல்களைத் தெரிவிக்கவோ அல்லது புகார்களை அளிக்கவோ பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset