நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்தது

கோலாலம்பூர்: 

முகநூலில் நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் கருத்துக்களைப் பதிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு உள்ளூர் ஆணை போலிஸ் கடந்த செவ்வாயன்று பினாங்கின் பட்டர்வொர்த்தில் கைது செய்தது.

47 வயதான சந்தேகநபர் இரவு 8.32 மணிக்கு பட்டர்வொர்த் போலிஸ் நிலையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.

'Sakti Sakti Sakti' என்ற முகநூல் பயனரின் வைரலான பதிவு தொடர்பாக மார்ச் 22-இல் அதிகாலை 1.30 மணிக்கு புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

"கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபர் சம்பந்தப்பட்ட கருத்துக்களைப் பதிவிட பயன்படுத்தியதாக நம்பப்படும் Vivo 29T வகை கைபேசியையும் போலிஸ் பறிமுதல் செய்தது" என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மார்ச் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் விசாரணைக்கு உதவ சந்தேகநபரைக் காவலில் வைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக ஃபாடில் கூறினார்.

இதற்கிடையில், மதம், இனம், அரச நிறுவனங்கள் (3R) தொடர்பான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொடும் உள்ளடக்கங்களைப் பரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

"போலிஸ் இந்த விஷயத்தில் எந்தச் சமரசமும் செய்யாது, நாட்டின் இணக்கத்தை பாதிக்கும் வகையில் சட்டத்தை மீறும் எந்த நபருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset