செய்திகள் மலேசியா
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
அராவ்:
பெர்லிஸ் மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்பம், வறட்சியிலிருந்து நிவாரணம் பெறவும், கருணை மழை பொழியவும் வேண்டி, அராவ் அரண்மனை மைதானத்தில் இன்று காலை சிறப்பு 'அல்-இஸ்திஸ்காராஹ்' (Al-Istisqarah) தொழுகை நடைபெற்றது.
பெர்லிஸ் மாமன்னர் மாண்புமிகு துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இளவரசர் துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா, அரச குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
காலை 8 மணியளவில் தொடங்கிய இந்த வழிபாட்டில், மாநிலத் தலைவர்கள், பொதுமக்கள் என ஏறத்தாழ 1,000 பேர் பங்கேற்று மழையை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்.
பெர்லிஸ் இஸ்லாமிய மத விவகாரத் துறையின் (JAIPs) துணை இயக்குநர் அஹ்மத் சிராஜுதீன் அப்துல் சத்தார் இத்தொழுகையை வழிநடத்தி, சிறப்புச் சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.
பெர்லிஸ் இஸ்லாமிய மத, மலாய் கலாச்சார மன்றத்தின் (MAIPs) அறிவிப்பின்படி, வரும் மார்ச் 27 முதல் மாநிலத்திலுள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது மழை வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படும். போதிய மழைப் பொழிவு கிடைக்கும் வரை இந்த நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நிலவும் நீர் பற்றாக்குறையைப் போக்க இறைவனிடம் மன்னிப்புக் கோரவும், நற்செயல்களில் ஈடுபடவும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வறண்ட காலநிலையிலிருந்து மீளத் தொடர்ந்து பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:23 pm
நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்தது
March 26, 2026, 12:16 pm
டீசல் விலை உயர்வு: லங்காவி படகுச் சேவைகள் அதிரடியாகக் குறைப்பு
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
