நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

ஜார்ஜ்டவுன்:

சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ஜோடி, தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 58 வயதான எம். ஜெகதீசன், 37 வயதான ஹலிலா அபு பாக்கார் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதை அடுத்து, மாஜிஸ்திரேட் நட்ராதுன் நைம் முகமது இந்தத் தண்டனையை வழங்கினார்.

கடந்த மார்ச் 22 அன்று காலை 8.30 மணிக்கு ஆயர் ஈத்தாம் பத்து கந்தோங்கில் உள்ள ஒரு சீன மயானத்தில் இருவரும் சேர்ந்து பாலியல் ரீதியிலான அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377டி-உடன் சேர்த்து, அதே விதியின் கீழ் தண்டனை வழங்கும் பிரிவு 34இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்தச் சட்டப்பிரிவின்படி, தனிநபர்களுக்கிடையே பொது இடத்திலோ அல்லது தனி இடத்திலோ செய்யப்படும் பெரும் ஒழுக்கக்கேடு ஒரு குற்றமாகும்.

மேலும் இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset