நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு

ஷா ஆலம்:

ஷா ஆலம் பகுதியில் பெருநாள் காலங்களில் பெரிய நகரங்களை விட சிற்றூர்கள், மாவட்டங்களில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகரங்களில் வசிப்போர் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதால், அந்தப் பகுதிகளில் தங்குமிடம் தேவை உயர்ந்துள்ளது என மைபிஹெச்ஏ (MyBHA) தலைவர் டாக்டர் ஸ்ரீ கணேஷ் மிஷீல் தெரிவித்துள்ளார் .

நாட்டின் பல பகுதிகளில் இருந்து கிடைத்த ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், தங்குமிட நிரப்பம் சுமார் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜொகூர், பேராக், கெடா, கிளாந்தான், திரெங்கானு போன்ற மாநிலங்களின் மாவட்ட நகரங்களில் அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

திருவிழாவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகள் அதிகரிக்கத் தொடங்கி, ஒரு வாரத்திற்கு முன்பு கணிசமான உயர்வு காணப்படுகிறது.

இருப்பினும், சிலர் திடீர் பயணங்களுக்காக கடைசி நேரத்தில் முன்பதிவு செய்வதும் தொடர்கிறது. பெரும்பாலான பட்ஜெட் ஹோட்டல்கள் இந்த காலத்திலும் அறை விலையை நிலையாகவே வைத்திருக்கின்றன.

இந்நிலையில், பதிவு செய்யப்படாத குறுகிய கால தங்குமிடங்கள் சிலரால் தேர்வு செய்யப்படுவது தொடர்கிறது. குறைந்த விலை, குடும்பங்களுக்கு ஏற்ற அதிக இடவசதி காரணமாக அவை விரும்பப்படுகின்றன. 

ஆனால், அவை பாதுகாப்பு, விதிமுறைகளில் விடுதிகளுக்கு இணையான தரநிலைகளை பின்பற்றாமல் இருப்பது கவலைக்கிடமாகக் கூறப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset