நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

அம்பாங்:

ஒரு வீட்டின் வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் ஒரு பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று மாலை, அம்பாங்கில் உள்ள தாமான் புத்ராவில் நிகழ்ந்தது. 

தனது வீட்டின் முன்பு குழந்தையைக் கண்டறிந்த ஒருவர், மாலை 6.27 மணிக்கு இது குறித்து புகார் அளித்தார்.

அந்தப் பெண் குழந்தை தற்போது சீரான நிலையில் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 317-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படலாம் என்று அம்பாங் ஜெயா  போலிஸ் தலைவர் அஸாம் இஸ்மாயில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset