நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டத்தை ஈரான் நிராகரித்தது

தெஹ்ரான்: 

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதி திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது.

அதற்கு பதிலாக, உள்ளூர் ஊடகம் ஒரு மூத்த அரசியல்-பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி, ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவது உட்பட மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஈரானின் ஐந்து நிபந்தனைகளைப் பட்டியலிட்டது.

எனினும் வெள்ளை மாளிகை அந்தத் திட்டத்தின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தவில்லை. இந்தத் திட்டத்தை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டன, வெள்ளை மாளிகை அதில் சில உண்மையான அம்சங்கள் உள்ளதாக மட்டுமே ஒப்புக்கொண்டது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவை அந்தத் திட்டத்தில் அடங்கியதாக கூறப்படுகிறது.

நேற்று டிரம்ப், ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்குத் "தவிக்கிறது" என்றும், எண்ணெய், எரிவாயு, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான "மிகவும் குறிப்பிடத்தக்க பரிசை" அமெரிக்காவிற்கு வழங்கியதாகவும் கூறினார், ஆனால் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த நாள், வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலைன் லீவிட், பேச்சுவார்த்தைகள் பயனுள்ள முறையில் நடைபெற்று வருவதாக கூறினார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் இதை மறுத்து, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவதையும் நிராகரித்தார். 

அப்பாஸ் அராக்சியின், அமெரிக்கா பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் செய்திகளை அனுப்புகிறது, ஆனால் அது பேச்சுவார்த்தை என்று அர்த்தமில்லை என்று தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset